நன்னிடம் பேருந்து நிலையம் அருகே அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது நன்னிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான நபர்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு மகப்பேறு பிரிவு உள் நோயாளிகள் என பல்வேறு சிகிச்சை பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. என் நிலையில் மருத்துவமனை வளாகத்தில் குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கி இருக்கிறது மேலும் மருத்துவ கழிவுகளும் இதில் கலந்து இருப்பதால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் அவர்களுடன் கூட வருபவர்களுக்கும் தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது மேலும் மருத்துவமனை வளாகத்தை சுற்றி உள்ள கழிவு நீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது இதனால் சாலைகளில் செல்பவர்களும் மூக்கை பிடித்தபடி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது எனவே மருத்துவமனை வளாகத்தில் தேங்கியுள்ள மருத்துவ கழிவுகள் மற்றும் குப்பைகளை அப்புறப்படுத்தி மருத்துவமனையை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்பது பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.