தற்காலிகமாக தடுப்பு சுவர் அமைக்கும் பணி நடைபெறுகிறது

62பார்த்தது
தற்காலிகமாக தடுப்பு சுவர் அமைக்கும் பணி நடைபெறுகிறது
பின்னத்தூர் ஊராட்சி பகுதிகள் முழுவதும் உள்ள அனைத்து வாய்க்கால் பாசன வாய்க்கால்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்காலிக தடுப்புச் சுவர்கள அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் பின்னத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் டி ஆர் ராஜேந்திரன் அவர்கள் தலைமையிலான நிர்வாகத்தின் சார்பில்.

தற்பொழுது தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தமிழகத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து விவசாய பணியை மேற்கொள்வதற்காக பாசன வாய்க்காளர்களுக்கு தண்ணீர் செல்வதற்காகவும் எதிர்வரும் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு கொண்டாடுவதுவதற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில்.

அதிவேகமாக தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் தற்பொழுது அனைத்து பகுதிகளிலும் உள்ள குளம் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு வருகிறது அதன் தொடர்ச்சியாக.

திருத்துறைப்பூண்டி பின்னத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் டி ஆர் ராஜேந்திரன் அவர்கள் தலைமையிலான நிர்வாகத்தின் சார்பில் அப்பகுதியில் உள்ள பாசன வாய்க்கால்கள் வடிகால்கள் மற்றும் குளங்களில் உள்ள தாழ்வான குளக்கரைகள் சாக்கு மூட்டைகள் கொண்டு மக்களை பாதுகாக்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது இந்த நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர் துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி