கன்னியாகுமரிக்கு நேற்று காலையில் வாவத்துறை கடற்கரையில், ஒரு ஆண் பிணம் மிதந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்தத கடலோர பாதுகாப்பு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து, கடலில் மிதந்த சடலத்தை மீட்டனர். போலீசார் நடத்திய விசாரணையில், அந்த சடலம் ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த பிரின்ஜிலால் (64) என்பதும், 47 பேர் கொண்ட குழுவினர் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்துள்ளதும், இவர் அதிகாலையில் வாவத்துறை கடல் பகுதியில் இறங்கி குளிக்க முயன்றபோது ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது.