உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கார்த்திகை மாதத்தின் நான்காவது சோமவாரத்தை முன்னிட்டு நேற்று (டிச., 09) மீனாட்சி அம்மனுக்கு 12 சங்குகளால் அபிஷேகமும் சுந்தரேஸ்வரருக்கு 1008 சகல அபிஷேகமும் நடத்தப்பட்டது. பிரசித்தி பெற்ற இந்த சங்காபிஷேகத்தை கண்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயில் சாமி தரிசனம் செய்தனர்.