திருவாரூரில் சுகாதார பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

73பார்த்தது
தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் சங்கம் சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் திருவாரூரில் நடைபெற்றது. தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் சங்கம் சார்பாக 100% முற்றிலும் காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர் நிலை இரண்டு பணியிடங்களை உடனடியாக போர்க்கால அடிப்படையில் தற்போழுது தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வரும் சுகாதார ஆய்வாளர்களுக்கு முன்னுரிமை அளித்து நிரப்பிட வேண்டும். 

சுகாதார ஆய்வாளர் நிலை இரண்டு பணியிடங்களை 2715 ஆக நிர்ணயிக்க கோரி பொது சுகாதாரத்துறை இயக்குனர் அவர்கள் அரசு அனுப்பிய கோப்புக்கு உடனடியாக ஒப்புதல் வழங்கிட வேண்டும். 5000 மக்கள் தொகை கொண்ட சுகாதார ஆய்வாளர் நிலை இரண்டு கொள்கையை முடிவை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று மாலை நடைபெற்றது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் சங்கத்தினர் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் சங்க தலைவர் ராதாகிருஷ்ணன், செயலாளர் சுவாமி ராஜன், பொருளாளர் அன்பரசன், துணைத்தலைவர் ஜோதிடநாதன், இணைச் செயலாளர் வினோத் கண்ணன் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி