திருவாரூர் செம்மங்குடி அகத்தீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாணம்

57பார்த்தது
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே செம்மங்குடியில் அமைந்திருக்கும் ஸ்ரீ அஹஸ்தீஸ்வரர் ஆலயத்தில் ஆனந்தவல்லி தாயாருக்கும், ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் சுவாமிக்கும் காலையில் திருக்கல்யாண வைபவம் விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக திருக்கல்யாண வரிசை பொருட்கள் எடுத்து வந்து சுவாமிக்கும் அம்பாளுக்கும் கங்கனாதாரணம் நடைபெற்றது. பின் தொடர்ந்து மாங்கல்ய தாரணம் எனும் அம்பாளுக்கு திருமாங்கல்யம் அணிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. 

தொடர்ந்து, பூர்ணாஹூதியுடன் ஆனந்தவல்லி தாயாருக்கு சிறப்பு அர்ச்சனை செய்து ஒன்பது வகையான மஹா தீபாராதனைகள், பஞ்ச ஆரத்தி காண்பிக்கப்பட்டு தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து இரவு கோ பூஜை, அஸ்வமேத பூஜை, கஜ பூஜை நடைபெற்றது. மேலும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வில் வெற்றியடைய வேண்டியும், திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடவும், குழந்தை பாக்கியம் கிடைத்திடவும், விவசாயம் செழிக்கவும் மற்றும் அனைத்து காரியங்களும் வெற்றியடைந்து செல்வம் செழித்தோங்க வேண்டியும் சிவாச்சாரியார்கள் பிரார்த்தனை செய்தனர். தொடர்ந்து 27 ஆவது ஆண்டாக நடைபெறும் இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாட்டினை ஸ்ரீ ஆனந்தவல்லி கைங்கர்ய சபா செம்மங்குடி அமைப்பின் சார்பில் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி