"பாஜக அரசின் 2025-26 மத்திய பட்ஜெட்டை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம், குடவாசல் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக. மத்திய அரசின் 2025-26-க்கான நிதிநிலை அறிக்கை ஏழை எளிய மக்களுக்கு பயன்படாத வகையில் உள்ளது. என மத்திய அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுந்தரமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில். "ஏழை எளிய நடுத்தர மக்களின் வாழ்வை நாசமாக்கும் வகையிலும், தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் நலனை வஞ்சித்து கார்ப்பரேட் பெரு முதலாளிகளின் நலனை பாதுகாக்கும் விதமாக அமைந்திருப்பதாக. நிதிநிலை அறிக்கையை கண்டிக்கும் வகையில். கோஷங்கள் எழுப்பி, குடவாசல் பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் குடவாசல் ஒன்றிய செயலாளர் லெனின், நகர செயலாளர் சேகர், லட்சுமி, சுகதேவ், ஆனந்தன், சரவணன் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.