நீடாமங்கலத்தில் போலி நகைகளை அடகு வைத்த இருவர் கைது

58பார்த்தது
நீடாமங்கலத்தில் போலி நகை அடகு வைத்த 2 பேர் கைது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகில் உள்ள கர்ணாவூர் தரிசுவேலி கிராமத்தை சேர்ந்த வீரசேகர்(29). இவர் நீடாமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் அடகுகடையில் ஏற்கனவே 6 போலி மோதிரங்கள் மோதிரம் அடகு வைத்து பணம் பெற்றுள்ளார். நேற்று ஒரு மோதிரம் அடகு வைக்க வந்துள்ளார். அப்போது அடகுகடைகாரர் அவரைபிடித்து நீடாமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர். அங்கு போலீசார் விசாரித்ததில் நீடாமங்கலம் அருகில் உள்ள வினோத்(35) என்பவர்தான் அடகு வைக்க சொன்னார் என்று கூறியுள்ளார். இவர் ஏற்கனவே மேலும் மூன்று கடைகளில் போலீ நகைகள் அடகு வைத்தது தெரிய வந்தது. அதன் மதிப்பு ரூ. 2 லட்சத்து 25ஆயிரம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக நீடாமங்கலம் தனியார் அடகுகடையை சேர்ந்த சாந்திலா மேத்தா(47)நீடாமங்கலம்போலீசில் கொடுத்த புகாரின் பேரில் வினோத், வீரசேகரை விசாரித்த போலீஸ் இனஸ் பெக்டர் சந்தனமேரி, சப் இன்ஸ் பெக்டர் உஷா வழக்கு பதிவு செய்து போலி நகை அடகு வைத்து மோசடி செய்ததாக 2 பேரையும் கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி