மன்னார்குடியில் பெண்களுக்கான பளு தூக்கும் போட்டி

52பார்த்தது
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் திருவாரூர் மாவட்ட அமெச்சூர் பளு தூக்கும் சங்கம் சார்பில் நேற்று முதல் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பளு தூக்கும் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இரண்டாவது நாளான இன்று பெண்களுக்கும் மாநில அளவிலான போட்டிகள் நடைபெற்றது. தூத்துக்குடி, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். பல்வேறு எடை பிரிவுகளில் பளுவை தூக்கி பெண்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி