திருவாரூர் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம் மூன்றாம் கட்ட முகாம் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் உத்திரங்குடி ஊராட்சியில் உயர் கல்வித் துறை அமைச்சர் செழியன் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது
அதன் பிறகு உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்பொழுது அவர் பேசியதாவது
திருவாரூர் மாவட்டத்தில் திரு வி க அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விரிவுரையாளர்கள் தொடர்ந்து பணி நிரந்தரம் ஊதிய உயர்வு குறித்து போராட்டம் நடத்துகிறார்கள் என்ற கேள்விக்கு
அதிமுக ஆட்சியில் 5000 ரூபாய் தான் கொடுத்தார்கள் 10 ஆண்டுகளாக ஆட்சி செய்தார்கள் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வந்தவுடன் மேலும் 5, 000 ரூபாய் உயர்த்தி கொடுத்துள்ளார் மேலும் தமிழக முழுவதும் கல்லூரி விரிவுரையாளர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் உயர்கல்வித்துறைக்கும் ஆளுநருக்கு இடையே உள்ள முரண் குறித்த கேள்விக்கு நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்தார்.