சென்னை மண்டல உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி சதீஷ்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் தமிழ்நாடு பொது சுகாதார மருந்து நிர்வாகத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள தர்ப்பூசணி பழ விவகாரத்திற்கு மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தர்பூசணிகளில் செயற்கை நிறமூட்டிகள் ஊசி மூலம் செலுத்தப்படுவதாக சதீஷ்குமார் வீடியோ வெளியிட்டிருந்தார். இதற்கு விவசாயிகள் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.