உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க இரும்பு சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது அவசியம். பீட்ரூட்டில் இரும்பு சத்து, ஃபோலேட் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் இருப்பதால் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்கிறது. பசலைக்கீரை, சத்து நிறைந்த பருப்பு வகைகள், மாதுளை உள்ளிட்டவற்றை தொடர்ந்து சாப்பிடலாம். ஆப்பிள் இரும்பு சத்து, வைட்டமின் சி நிறைந்த பழம் என்பதால் அதிக பயனளிக்கும்.