பொருளாதாரத்தில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அபார வளர்ச்சியை தமிழ்நாடு பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசின் திட்ட அமலாக்கத்துறை இது தொடர்பான சில புள்ளி விபரங்களை வெளியிட்டுள்ளது. மாநில வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு 9.69% என்ற பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது. இந்நிலை தொடர்ந்தால் 2032-33ஆம் நிதியாண்டில் தமிழ்நாடு 1 டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக மாறும் என துறை வல்லுனர்கள் கணித்துள்ளனர்.