நீர் நிலைகளை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்படும் நிலையில் நெதர்லாந்தின் லெம்மர் மெரினா பகுதியில் நீர் வழித்தடத்திற்கு இடையூறு ஏற்படுத்தாமல் குடியிருப்புகளை கட்டமைத்திருக்கிறார்கள். நீர்வழித்தடங்களுக்கு அருகில் வசிக்கவும், அங்கு நிலவும் அமைதியான சூழலை எந்தவித சிரமமும் இல்லாமல் அனுபவிக்கவும் இந்த கட்டமைப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இங்கு வசிப்பவர்கள் வீட்டுக்கு வெளியே படகுகளை நிறுத்தி கொண்டு, அதில் சவாரியும் செய்யலாம்.