தஞ்சையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் திருவுருவ சிலையின் மீது திமுக - பாஜக கொடியை போர்த்தி சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே அண்ணா சிலை மீது, எதிரெதிர் துருவங்களாக நிற்கும் இரு கட்சிகளின் கொடிகள் போர்த்தி உள்ள சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெரியார், அம்பேத்கர் சிலைகள் அவ்வப்போது அவமரியாதை செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது அண்ணா சிலை மீது மர்ம ஆசாமிகளின் பார்வை திரும்பியுள்ளது.