ரயிலில் ஏ.சி. முதல் வகுப்பில் பயணிப்பவர்கள் 70 கிலோ வரை உடமைகளை தங்களுடன் கொண்டு செல்லலாம் என்ற விதிமுறை உள்ளது. ஏ.சி. 2 படுக்கை பெட்டிகளில் 50 கிலோ வரையிலும், ஏ.சி. 3 படுக்கை பெட்டிகளில் 40 கிலோ வரையிலும் உடமைகளை கொண்டு செல்ல முடியும். சிலீப்பர் கிளாஸ் எனப்படும் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகளில் 40 கிலோ எடையிலான உடமைகளை பயணிகள் கொண்டு செல்லலாம் என்பது ரயில்வே விதிகளில் வருகிறது.