மாசிமக தீர்த்தவாரி வெகு விமர்சையாக நடைபெற்றது பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவாரூர் மாவட்டம்
வடுவூர் கோதண்டராமர் கோவிலில் மாசி மக தீர்த்தவாரி வெகு விமர்சையாக நடைபெற்றதுவில்லேந்திய திருக்கோலத்தில் ஸ்ரீ கோதண்ட ராமர், ஸ்ரீ சீதாதேவி, ஸ்ரீ லெட்சுமணன், ஸ்ரீ ஹனுமன் சமேதராக திருக்கோவிலில் இருந்து மேள தாளங்கள் முழங்க புறப்பட்டு கோவிலின் பின்புறம் உள்ள சரயு புஷ்கரணி தெப்பக்குளத்தில் எழுந்தருளினார்.
அங்கு தீர்த்த பேரரர் சுவாமிக்கு மங்களப் பொருட்களைக் கொண்டு அபிஷேகம் ஆராதனைகள் செய்தனர். அதனைத் தொடர்ந்து தீட்சதர்கள் தீர்த்த பேரரை தலையில் சுமந்தபடி குளத்தில் மூழ்கி எழுந்து தீர்த்தவாரி நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ கோதண்டராமரை தரிசனம் செய்து வழிபட்டனர்.