திருவெற்றியூரில் தேரோட்டம்.

70பார்த்தது
*திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி திருக் கோயில் மாசி மக தேரோட்டம்*

*ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் இழுத்தனர்*.

திருவொற்றியூர் பிப். 22
வடசென்னை திருவொற்றியூரில் பழமை வாய்ந்த திருக்கோயிலாக உள்ள
ஸ்ரீ தியாகராஜா சுவாமி வடிவுடை அம்மன் திருக்கோயிலில் மாசிமக பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு ஏழாம் நாள் திருவிழாவில்
41அடி உயரம் உள்ள திருத் தேரினை சிறப்பு பூஜைகள் செய்து பக்தர்கள் சிவனடியார்கள் திரளான பெண்கள்பக்தி பரவசத்துடன் வடத்தைஇழுத்து திருத்தேரோட்டம் திருவிழாவை வெகு விமரிசையாக நடத்தினார்கள்.

மாசிமக பிரம்மோற்சவ விழா கடந்த
15 ஆம் தேதி கொடியேற்றத் துடன் துவங்கிய நிலையில் இன்று ஏழாம் நாள் திருவிழாவில் சந்திரசேகரர் மனோன்மணி தாயார் சிறப்பு அலங்காரங்களுடன் தேரில் எழுந்தருளி பூஜைகள்
தூப தீப ஆராதனைகள் செய்யப்பட்டு
4 மாட வீதிகளிலும் திருத்தேரில்
சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்

வடசென்னை பகுதிகளில் உள்ள திருக்கோயில்களில் பெரிய அளவில் உள்ள தேர் இங்கு மட்டும் உள்ளது என்பதால் தேரோட்டத்தை காண்பதற்காக வடசென்னை பகுதிகளில் உள்ள ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக வந்திருந்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி