மதுரவாயலில் உள்ள சவுக்கு சங்கர் வீட்டில் தேனி போலீசார் சோதனை

1912பார்த்தது
அண்மையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த சவுக்கு சங்கர், போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் பெண் போலீஸ் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அவர் மீது கோவையை சேர்ந்த பெண் போலீஸ் ஒருவர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் கடந்த 4-ந்தேதி தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் வைத்து சவுக்குசங்கரை கைது செய்தனர்.

மேலும் அவரது காரில் கஞ்சா இருந்த நிலையில் கோவை போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் மதுரவாயல் உள்ள சவுக்கு சங்கர் வீட்டில் நீதிமன்ற உத்தரவுப்படி
தேனி மாவட்ட போலீசார் சவுக்கு சங்கர் வீட்டில் சோதனை செய்து வருகின்றனர்.

அவரது வீடு பூட்டப்பட்டிருந்த நிலையில் மதுரவாயல் வருவாய் துறையினர் வரவழைக்கப்பட்டு அவர்களின் முன்னிலையில் பூட்டை உடைத்து உள்ளே சென்று போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். வீட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் உள்ளனவா என்பது குறித்தும் இந்த சோதனை நடைபெறுவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடன் மதுரவாயல் தாசில்தார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மதுரவாயல் போலீசார் உள்ளனர்.

சவுக்கு சங்கர் மீது பெண் வன்கொடுமை மற்றும் கஞ்சா வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தேனி மகிளா நீதிமன்ற உத்தரவுபடி தற்போது சோதனை நடைபெற்று வருகிறது என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி