போதை பொருள் எதிர்ப்பு மையம் அமைக்க காவல் ஆணையர் வலியுறுத்தல்!

60பார்த்தது
போதை பொருள் எதிர்ப்பு மையம் அமைக்க காவல் ஆணையர் வலியுறுத்தல்!
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி பகுதியில் உள்ள கல்லூரிகளில் போதைப் பொருள் எதிர்ப்பு மையம் உருவாக்க வேண்டும் என காவல் ஆணையர் கி. சங்கர் வேண்டுகோள் விடுத்தார்.

ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் கல்லூரிகளின் நிர்வாகிகள் மற்றும் முதல்வர்கள் ஆகியோருக்கான போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் திருமுல்லைவாயிலில் உள்ள காவலர் கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது.

போதையில்லா தமிழ்நாடு என்ற முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் குறிக்கோளின்படி, ஆவடி பகுதியில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் மற்றும் மாணவிகளிடம் போதைப் பொருள்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இதற்காக ஒவ்வொரு கல்லூரியிலும் "போதைப் பொருள் மையம்" எதிர்ப்பு ஏற்படுத்த வேண்டும். கல்லூரிகளில் மாதந்தோறும் ஆய்வுக் கூட்டம் நடத்த வேண்டும்.

மேலும் படிக்கும் மற்றும் பணியாற்றும் கல்லூரியில் மாணவிகள் கல்லூரியில் பெண் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பாதுகாப்பை பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என காவல் ஆணையர் சங்கர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி