சிறந்த பாடகர்களுக்கான போட்டி நடத்தப்பட்டது.

60பார்த்தது
குன்றத்தூர் அடுத்த கோவூரில் உள்ள தனியார் பள்ளியில் சிறந்த பாடகர்களுக்கான போட்டி நடத்தப்பட்டது. இதற்கான ஆடிஷனில் 1500 மாணவர்கள் கலந்து கொண்ட நிலையில் அதிலிருந்து 50 பல்வேறு பள்ளியை சேர்ந்த மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு சிறந்த பாடகர்களுக்கான போட்டி நடத்தப்பட்டது. ஒவ்வொரு மாணவர்கள் தங்கள் தனித்திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் தேவா கலந்து கொண்டு முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு காசோலைகளை வழங்கி கவுரவித்தார். இதையடுத்து அவர் அளித்த பேட்டியில்:

இன்றைய
காலத்திற்கு ஏற்ப இசை அமைப்பில் ஸ்டைலை மாற்றி கொள்ள வேண்டும்

மணிரத்தினம் படம் வந்த பிறகு மாற்றியது போல் இப்பொழுது நான் மாற்றியாக வேண்டும் இல்லை என்றால் இந்த துறையில் நிற்க முடியாது.


தனுஷ் படத்தில் வில்லனாக நடிக்க அழைத்தார்கள். என்னை போல் சென்னை பாசை பேசுபவர் யாரும் இருக்க முடியாது என கூறினார்கள் ஆனால் தனுஷுக்கு போன் செய்து மறுத்துவிட்டேன்.


தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான் தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான் என்ன சூசகமாக பதில் அளித்தார்.


இறைவனின் அருள் இருந்தால் மீண்டும் ரஜினிகாந்த் படத்திற்கு இசையமைப்பேன் என பேசினார்.

தொடர்புடைய செய்தி