காலணிகள் திருடு: அறநிலையத்துறைக்கு பக்தர்கள் வேண்டுகோள்

54பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மலை மீது சாமி தரிசனம் செய்ய தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பகுதியிலிருந்து அதிகப்படியான பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு மலைக் கோயில் வருகின்றனர்
அப்படி வரும் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு செல்வதற்கு முன்பு திருக்கோயில் காலணிகள் பாதுகாக்கும் பகுதியில் காலணிகளை விட்டு செல்கின்றனர் அப்படி விட்டு செல்கின்ற காலணிகள் சாமி தரிசனம் செய்துவிட்டு வரும்போது திருடுபோய் விடுவதாகவும் இந்த பகுதியில் கண்காணிப்பு கேமரா இல்லை மற்றும் கோயில் ஊழியர்கள் இந்த பகுதியில் பாதுகாப்புக்கு இல்லை மற்றும் மழை வெயில் போன்ற நேரங்களில் இந்த பகுதியில் நிற்பதற்கு கூட காலணிகள் வைத்துள்ள பகுதியில் முடியவில்லை வேதனையாக உள்ளது என்று பக்தர்கள் குற்றச்சாட்டு பக்தர்கள் பாதுகாப்பான முறையில் கோயில் பகுதிகளில் விட்டு செல்கின்ற காலணிகள் திருக்கோயில் ஒப்பந்த பணியாளர்கள் குப்பைகளை அள்ளுவது போல் அல்லி இதனை குப்பையில் வீசி விடுகின்றனர்
திருக்கோயிலில் 16 வருடமாக ஒப்பந்த பணியில் உள்ள பத்மாவதி காண்ட்ராக்ட் ஒப்பந்த பணியாளர்கள் காலணிகள் விடும் பகுதியில் இவர்கள் பாதுகாப்பிற்கு இல்லாமல் மேலும் காலணிகளை அள்ளி குப்பைகளை போல் வீசி விடுகின்றனர் இதற்கு அறநிலையத்துறை அதிகாரிகள் தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி