பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட திரைப்பட நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு ரங்கா ரெட்டி மாவட்ட நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி உள்ளது. அக்.6-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை நடைபெற உள்ள தேசிய விருது வழங்கும் விழாவில் கலந்துக்கொள்வதற்காக ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் ஜானி மாஸ்டருக்கு "திருச்சிற்றம்பலம்" திரைப்படத்திற்காக தேசிய விருது அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.