பாழடைந்த கிணற்றில் விழுந்த மாடு மீட்பு

81பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஜோதி நகர் பகுதியில் கிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான விவசாய இடத்தில் பயன்பாடு இல்லாத 100 அடி ஆழமுள்ள கிணறு உள்ளது. இந்த கிணற்றில் சுப்பிரமணி என்பவருக்கு சொந்தமான காளை மாடு ஐந்து மாத கன்று குட்டி மேய்ச்சலுக்குச் சென்றது. இந்நிலையில் திடீரென்று கிணற்றுக்குள் கன்றுக்குட்டி உள்ளே விழுந்து உயிருக்கு போராடியது. உடனடியாக திருத்தணி தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து
விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் 2 மணி நேரம் போராடி கன்று குட்டியை உயிருடன் மீட்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி