திருத்தணியில் பிரபல நடிகர் தரிசனம்

5889பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருக்கோயில் ஆகும். இந்த திருக்கோயிலில் 2024 ஆங்கில புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி நள்ளிரவு மூலவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு மகா தீப ஆராதனை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் நள்ளிரவு 12 மணிக்கு பிரபல திரைப்பட நடிகர் யோகி பாபு சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். அவருக்கு திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் மலர்மாலை மற்றும் பிரசாதங்கள் வழங்கி கௌரவம் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து திரைப்பட நடிகர் யோகி பாபு உடன் பக்தர்கள் செல்பி எடுத்துக் கொண்டு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்து மகிழ்ந்தனர். இந்த சிறப்பு நள்ளிரவு நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகப்பெருமானை தரிசனம் செய்ய மலைக்கோவிலில் குவிந்தனர். இரண்டு மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி