கொச்சி சர்வதேச விமான நிலையம் வழியாக கடந்த ஞாயிறன்று கடத்திவரப்பட்ட அரியவகை பறவைகளின் உயிரைக் காப்பாற்றும் முயற்சியில் சுங்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தாய்லாந்தில் இருந்து வந்த 2 பயணிகளிடம் இருந்து 14 பறவைகள் கைப்பற்றப்பட்டதை அடுத்து அதிகாரிகள் அவற்றுக்கு பழங்கள், தண்ணீர் கொடுத்தனர். பப்பாளி, அன்னாசி பழங்கள் மற்றும் தினை கொடுக்கப்பட்டது. அவற்றை உண்ட பறவைகள் புத்துணர்ச்சி பெற்றன.