நாமக்கல்: பள்ளிபாளையம் ஒன்றியம், எலந்தகுட்டை கிராமத்தில் வேளாண்மைத்துறை மூலம் விவசாயிகளுக்கு மண் மாதிரி சேகரிப்பதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டது. மேலும், விவசாயிகள் தங்கள் நிலத்தில் மண் மாதிரி சேகரித்து, மண்ணின் வளத்தை அறிந்து உரமிடுதல் அவசியம் என்பதை உணர்த்தப்பட்டது. உழவன் செயலியின் மூலம் பயிர்களுக்கான உரம் குறித்த பரிந்துரைக்கப்படுவதாக விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. முகாமில் உதவி வேளாண்மை அலுவலர்கள் விஷ்வபிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.