சென்னை எழும்பூரில் நடந்த எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சுப்பிரமணியன், எச்.ஐ.வி பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதாகவும், தற்போது புதிதாக 748 பேருக்கு எச்.ஐ.வி பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இந்திய அளவில் 0.23% பாதிப்பு இருக்கும் நிலையில், தமிழகத்தில் 0.16% உள்ளதாகவும், இதை பூஜ்ஜியமாக குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், எச்.ஐ.வி பாதித்த 7,303 குழந்தைகளுக்கு அறக்கட்டளை மூலம் உதவிகள் செய்யப்பட்டு வருவதாகவும் கூறினார்.