‘3 பேர் கொலை’.. சிபிஐ விசாரணை கோரும் அண்ணாமலை

66பார்த்தது
‘3 பேர் கொலை’.. சிபிஐ விசாரணை கோரும் அண்ணாமலை
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த சேமலைகவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தெய்வசிகாமணி (78), அவரது மனைவி அலமாத்தாள் (75), மகன் செந்தில்குமார் (46) ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். மேலும், வீட்டில் இருந்த 8 பவுன் நகையையும் கொள்ளை அடித்துச் சென்றனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த நிலையில், மூவர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி