திருத்தணி முருகன் கோயிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

78பார்த்தது
முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோயிலில் இன்று தை கிருத்திகை முன்னிட்டு அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். 

இதில் சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு வேலூர் திருவண்ணாமலை உள்ளிட்ட தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்து பெண்கள் பால்குடம் எடுத்தும் முருகனுக்கு மாலை அணிவித்தும் அரோகரா அரோகரா என பக்தி முழக்கத்துடன் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். 

அதனைத் தொடர்ந்து மாலை முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை தாயாருடன் மாட வீதியில் மயில்வாகனத்தில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார்.

தொடர்புடைய செய்தி