அதிமுகவுடன் கூட்டணி.. அமித் ஷா கருத்துக்கு கே.பி.முனுசாமி பதில்

67பார்த்தது
அதிமுகவுடன் கூட்டணி.. அமித் ஷா கருத்துக்கு கே.பி.முனுசாமி பதில்
அதிமுகவுடன் கூட்டணி பேச்சு நடைபெற்றுவருவதாக மத்திய அமைச்சர் அமித் ஷா பேட்டியளித்த நிலையில், அது அவரது சொந்தக் கருத்து என அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி விளக்கமளித்தார். கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களை சந்தித்த கே.பி.முனுசாமி, "மாநில அரசின் நலனுக்காக டெல்லிக்கு சென்று அமிஷாவை சந்தித்தோம். இதில் எந்தவித அரசியலும் இல்லை. கொள்கை ரீதியாகவும், இணக்கமாக செயல்படும் கட்சிகளோடு கூட்டணி வைத்து செயல்பட தயாராக இருக்கிறோம்" என்று பேட்டியளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி