"அதை நம்பாதீங்க" - ராஜ்கமல் பிலிம்ஸ் எச்சரிக்கை

56பார்த்தது
"அதை நம்பாதீங்க" - ராஜ்கமல் பிலிம்ஸ் எச்சரிக்கை
நடிகர் கமல் ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் பெயரில், மோசடி நடப்பதாக தகவல் வெளியானது. இதனால் RKFI சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராஜ்கமல் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "காஸ்டிங் ஏஜெண்டுகள் என யாரேனும் தொடர்பு கொண்டால் நம்ப வேண்டாம். RKFI தயாரிக்கும் படங்களுக்கு, எங்களின் சார்பில் எந்த ஒரு காஸ்டிங் ஏஜெண்டும் நியமனம் செய்யப்படவில்லை. இவ்வாறான செயலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி