திருத்தணி அருகே ஆசிரியர் நகர் பகுதியில் பாழடைந்த விவசாய கிணற்றில் உயிருக்கு போராடிய பசுமாடு தீயணைப்பு படை வீரர்கள் உதவியுடன் மாடு மீட்கப்பட்டது
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் ஆசிரியர் நகர் பகுதியில் பெருமாள் என்பவரது பாழடைந்த விவசாய கிணறு உள்ளது
இதில் ஜெயராமன் என்பவரது விவசாயி பசுமாடு இந்த கிணற்றில் நேற்று மாலை மேட்சலுக்காக சென்றது
கிணற்றில் தவறி விழுந்து உள்ளது நேற்று மாலை முதல் இரவு முழுவதும் ஜெயராமன் தேடியும் மாடு கிடைக்காததால் இன்று அதிகாலையும் தேட ஆரம்பிக்கும்போது கிணற்றிலிருந்து பசுமாடு கத்தி உள்ளது
இதனை கண்டு அருகில் சென்று பார்த்த போது பாழடைந்த கிணற்றில் உள்ளே இருப்பதை தெரிந்து கொண்டு
இதனை உடனடியாக மீட்க திருத்தணி தீயணைப்பு படை வீரர்கள் வரவழைக்கப்பட்டு அவர்கள் உதவியுடன்
ஒரு மணி நேரம் தீயணைப்பு படை வீரர்கள் கிணற்றிலிருந்து பசு மாடு மீட்க போராடி உயிருடன் பசுமாடு பத்திரமாக மீட்டனர்