திருவேற்காடு நகராட்சியில் 12வது வார்டு பகுதியில் 15 நாட்களாக, வீடு, சாலைகளில் குப்பை தேங்கி, துர்நாற்றம் வீசுகிறது. பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும். எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாததை அடுத்து, 12வது வார்டு தி. மு. க. , கவுன்சிலர் ராணி சுடலைமணி மற்றும் பொதுமக்கள் இணைந்து கோலடி சாலையில், மூக்கை பொத்தி, நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.