ஏடிஎம்-களில் இனி நிதி பரிவர்த்தனைகளுக்கு ரூ.2 கூடுதல் கட்டணம் மற்றும் நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கு ரூ.1 கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என RBI புதிய விதி அமல்படுத்தவுள்ளது. இது மே 1 முதல் அமலுக்கு வருகிறது. புதிய விதிமுறைகளின்படி, நிதி பரிவர்த்தனைகளுக்கு அதாவது பணம் எடுப்பதற்கு பரிமாற்றக் கட்டணம் ரூ.17-ல் இருந்து ரூ.19 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கு அதாவது இருப்பு விசாரணை அல்லது பிற சேவைகளுக்கு பரிமாற்றக் கட்டணம் ரூ.6-ல் இருந்து ரூ.7 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.