சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டியின் வர்ணனையில், “லண்டன் கருப்பு டாக்ஸிகளின் மீட்டரைப் போல, ஜோஃப்ரா ஆர்ச்சரின் மீட்டரும் அதிகமாகவே உள்ளது” என ஹர்பஜன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. லண்டன் கருப்பு டாக்ஸியுடன் ஆர்ச்சரை ஒப்பிட்டுப் பேசியது 'இனவாத கருத்து' என வலைதளங்களில் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர். RR வீரர் ஆர்ச்சர் 4 ஓவரில் 76 ரன்கள் விட்டுக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.