ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை அதிக வெப்பநிலை காணப்படும்.

1040பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு கல்லூரியின் இயற்பியல் துறை சார்பில் நடைபெற்ற இயற்பியல் மன்ற விழாவில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். வானிலை தொடர்பான விளக்கங்கள், மாணவர்களின் சந்தேகங்களுக்கு அப்போது விளக்கம் அளித்தார். வானிலை கணிக்கப்படுவதில் இயற்பியல் மற்றும் கணிதத்தின் பங்குகள் குறித்து அப்போது மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாலச்சந்திரன் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான வானிலை முன்னறிவிப்பில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக கூறினார். கோடை காலத்தை பொறுத்தவரையில் கடற்கரை பகுதிகள், உள் பகுதிகள், மலை பகுதிகள் என 3பிரிவுகளாக வகைப்படுத்தப்படுவதாகவும், வெப்ப அலை என்பது ஒவ்வொரு பிரிவுகளாக குறிப்பிட்ட செல்சியஸ் வரையில் தீர்மாணிக்கப்பட்டு வருவதாகவும், 45டிகிரி செல்சியஸ் பதிவானாலும் வெப்ப அலை என கூறுவதாகவும், தொடர்ந்து வானிலையை கணித்து 5நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பை அளித்து வருவதாகவும் கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி