காங்கிரஸ் எம்எல்ஏ-வை சிறைபிடித்து சரமாரி கேள்வியெழுப்பிய மக்கள்

68பார்த்தது
காங்கிரஸ் எம்எல்ஏ-வை சிறைபிடித்து சரமாரி கேள்வியெழுப்பிய மக்கள்
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிவகாசி மாநகராட்சியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து திருத்தங்கல் 1வது வார்டு பகுதியில் மாமன்ற உறுப்பினரும், பகுதி கழக செயலாளர் அ.செல்வம் மற்றும் சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன் ஆகியோர் பரப்புரை மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பெண்கள் தங்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவில்லை எனவும் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் சட்டமன்ற உறுப்பினரை முற்றுகையிட்டனர்.

தேர்தலுக்குப் பின்னர் உரிமைத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததால் அங்கிருந்து மக்கள் கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி