வயநாட்டில் ராகுல் காந்தி இன்று வேட்புமனு தாக்கல்

55பார்த்தது
வயநாட்டில் ராகுல் காந்தி இன்று வேட்புமனு தாக்கல்
மக்களவை தேர்தலில் 2019-ஐ தொடர்ந்து இந்த முறையும் காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தி, கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக இன்று வயநாட்டில் அவர் வாகன பேரணியில் ஈடுபடுகிறார். தொடர்ந்து, நண்பகலில் மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தனது வேட்பு மனுவையும் ராகுல்காந்தி தாக்கல் செய்ய உள்ளார். இதற்காக மாநில காங்கிரஸ் தலைவர்கள், தேசிய அளவிலான காங்கிரஸ் பிரமுகர்கள் வயநாட்டில் முகாமிட்டுள்ளனர்.

முப்பைநாடு ரிப்பன் தளக்கல் மைதானத்துக்கு ஹெலிகாப்டர் மூலம் காலை 10:00 மணிக்கு ராகுல் காந்தி வருகிறார். மாவட்ட தேர்தல் அதிகாரி, ஆட்சியர் ரேணு ராஜிடம் வேட்புமனு தாக்கல் செய்யும் ராகுல், இன்றைய தினமே வயநாட்டில் இருந்து புறப்படுகிறார்.