ஊருக்குள் புகுந்த சிறுத்தை: தனியார் பள்ளிக்கு விடுமுறை!

41883பார்த்தது
மயிலாடுதுறை அருகே சிறுத்தை நடமாட்டம் தென்பட்ட தனியார் பள்ளிக்கு இன்று ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை அருகே செம்மங்குளம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்ட பால சரஸ்வதி மெட்ரிக் பள்ளிக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார். சிறுத்தையைப் பிடிக்க வனத்துறை அதிகாரிகள் தேடுதல் வேட்டை நடத்தி வரும் நிலையில், கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிறுத்தை தென்பட்டால் 9360889724 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி