திணறும் காங்கிரஸ்: 'இண்டியா' கூட்டணி அதிருப்தி

78பார்த்தது
திணறும் காங்கிரஸ்: 'இண்டியா' கூட்டணி அதிருப்தி
கடந்த மக்களவைத் தேர்தலில் ரேபரேலி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சோனியா காந்தி, இந்த முறை மாநிலங்களவைக்கு தேர்வாகி விட்டார். அமேதி தொகுதியில் ஸ்மிருதி ராணியிடம் தோல்வியடைந்த ராகுல் காந்தி இந்த முறை வயநாடு தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறார். எனவே அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளுக்கு இன்னமும் வேட்பாளரை அறிவிக்க முடியாமல் காங்கிரஸ் கட்சி திணறி வருகிறது. இதனால் அதிருப்தியடைந்த சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் நடத்தும் ‘ஹோலி மிலான்’ பண்டிகையை புறக்கணித்துவிட்டு லக்னோ சென்று விட்டதால் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி