இலவசம் கொடுத்து மக்களை ஏமாற்றி வருகிறார்கள் - சீமான்

73பார்த்தது
இலவசம் கொடுத்து மக்களை ஏமாற்றி வருகிறார்கள் - சீமான்
தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் அதிகாரத்திற்கு வருவதற்கு இலவசம் கொடுத்து மக்களை ஏமாற்றி வருகிறார்கள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். திருச்சியில் நாதக வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷை ஆதரித்து நேற்று பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், நிலையான கோட்பாடு உறுதியோடு இருப்பதால்தான் நாங்கள் எவரோடும் கூட்டணி இல்லை. எங்கள் முன்னோர்கள் மீது குறை இருக்கிறது விமர்சனம் இருக்கிறது. பெருந்தலைவர் காமராஜர் செய்த பிழை இந்தியன். அதனால் தேவிகுளம், பீர்மேடு உள்ளிட்ட தாலுகாக்களை கொண்ட இடுக்கி மாவட்டம் கேரளாவிற்கு சொந்தமாகி போனது.

நமக்கான காலத்தை நாம் அமைத்துக் கொள்ள வேண்டும். மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக நாதகவின் சின்னமான 'மைக்' சின்னத்தில் வேட்பாளர் ஜல்லிகட்டு ராஜேஷுக்கு வாக்களிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

தொடர்புடைய செய்தி