ஜான் பாண்டியனை ஆதரித்து டிடிவி தினகரன் பிரச்சாரம்

70பார்த்தது
ஜான் பாண்டியனை ஆதரித்து டிடிவி தினகரன் பிரச்சாரம்
தென்காசி மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடும் தமமுக தலைவர் ஜான் பாண்டியனை ஆதரித்து, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கடையநல்லூரில் நேற்று இரவு பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், மூன்றாவது முறையாக பிரதமராக மோடி வருவது உறுதி. இந்தியாவின் பாதுகாப்பிற்கு அரணாக இருப்பது பாஜக மட்டுமே. தொகுதி வளர்ச்சிக்கும், தமிழகத்தின் வளர்ச்சிக்கும் பாஜகவிற்கு நீங்கள் வழங்கும் வாக்குகள் தான் உதவியாக அமையும். வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு பாஜக அரசின் நடவடிக்கைகளே காரணம் என்றார்.

தொடர்புடைய செய்தி