கன்னியாகுமரி மாவட்டம் புத்தன்துறை கடற்கரை கிராமத்தில் கோயில் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கியதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அந்தோனியார் கோயில் திருவிழாவின்போது மின்கம்பத்தில் ஏணி உரசியதில் மைக்கேல் பின்றோ, மரிய விஜயன், அருள் சோபன், ஜஸ்டஸ் ஆகிய நால்வரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.