125 ஆண்டுகளில் இல்லாதளவுக்கு இந்தாண்டு பிப்ரவரியில் அதிக வெப்பநிலை பதிவாகி உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு முன் 1901-ம் ஆண்டு பிப்ரவரியில் 22 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்தது. அதன்பின் பிப்ரவரியின் சராசரி வெப்பநிலையில் 20.70 ஆக இருந்தது. இந்நிலையில், இந்த பிப்ரவரியில் 22.04 டிகிரி பதிவாகியுள்ளது. மேலும், மார்ச் மாதத்திலும் வெப்ப அலைகள் அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.