இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று (மார்ச்.,1) மாலை 5 மணிக்கு மும்பை சிட்டி எப்.சி. - மோஹன் பகான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் மோஹன் பகான் அணி 2 கோல்கள் அடித்தது. 2வது பாதி ஆட்டத்தில் மும்பை அணி 2 கோல்கள் அடித்தது. தொடர்ந்து, மூன்றாவது கோல் அடிப்பதற்காக, இரு அணி வீரர்களும் போட்டிப்போட்டுக் கொண்டனர். இறுதியில் இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.