ஈரோட்டில் சிறுத்தை நடமாட்டம்.. பதற்றத்தில் மக்கள்

57பார்த்தது
ஈரோட்டில் சிறுத்தை நடமாட்டம்.. பதற்றத்தில் மக்கள்
ஈரோடு சில்லாங்காட்டுவலசு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கன்றுக்குட்டி, நாய்க்குட்டியை சிறுத்தை தாக்கியுள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். தானியங்கி கேமராக்கள் மூலம் சிறுத்தை நடமாட்டம் குறித்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். கூண்டுகள் வைத்து சிறுத்தையை பிடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. உயிரிழந்த கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஈரோடு வனச்சரக அலுவலர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி