தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு இன்று (மார்ச். 01) 71 வயது நிறைவடைந்து 72வது வயது பிறந்துள்ளது. பிறந்த நாள் காணும் அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திமுக தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தனது குடும்பத்தினருடன் கேக் வெட்டி முதல்வர் ஸ்டாலின் தனது பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளார். இந்த நிகழ்வில் அமைச்சர் துரைமுருகனும் கலந்து கொண்டார்.