ஆப்பிள் நிறுவனத்துடன், ஏர்டெல் தொலைத் தொடர்பு நிறுவனம் இணைந்து ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் ஆப்பிள் டிவி+ வீடியோ மற்றும் ஆப்பிள் மியூசிக்கை வாடிக்கையாளர்கள் பயன்படுத்த முடியும். ரூ.999 என்ற ஆரம்பக் கடணத்தில் தொடங்கும் திட்டங்களில் உள்ள அனைத்து வீட்டு வைஃபை வாடிக்கையாளர்களும் இதனை பயன்படுத்திக்கொள்ளலாம். கூடுதலாக, தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் மட்டும் ஆப்பிள் மியூசிக்கை 6 மாதங்கள் இலவசமாக பெறலாம்.