தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

77பார்த்தது
தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தென்தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி